தமிழ் குழந்தைப் பெயர்கள்

ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாகிறது

கபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ரஜினியின் இளையமகளும் இயக்குனருமான சவுந்தர்யா ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி, அவரது தீவிர முயற்சியாலும், கடின உழைப்பாலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவரது வாழ்க்கை பலருக்கு முன்மாதிரியாக இருக்கும். அவரை பற்றி மற்றவர்களை விட எங்களுக்கு நன்றாக தெரியும் அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். எனவே அவரை பற்றி படம் சிறப்பாக அமையும். என்று கூறி இருக்கிறார்.

இது தவிர ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வரியா தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தைஎழுதி வருகிறார். இதில் இளம் வயது முதல் இன்று வரை உள்ள ரஜினியின் பல்வேறு தகவல்கள் இடம் பெற இருக்கிறது. இந்த தகவலையும் சவுந்தர்யா தெரிவித்து இருக்கிறார்.

Rajni2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *