தமிழ் குழந்தைப் பெயர்கள்

மீன் தொட்டியை பராமரிப்பது எப்படி

அவசரமாக நகரும் இன்றைய சூழலில் நாமும், அதனுடன் சேர்ந்து ஓடி வாரம் முழுவதும் அயராது உழைக்கிறோம். இதனால் ஏற்படும் சோர்வையும்,
மன உளைச்சளையும், மன அழுத்தத்தையும் நீக்க மனத்திற்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறோம். அப்போது உள்ள பல பொழுது போக்குகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது மீன் வளர்ப்பது. அப்படி வீட்டில் மீன்கள் வளர்க்கும் போது, மீன் தொட்டி வீட்டை அழகாக கட்டுவதுடன், வண்ண தொட்டிகளில் நீந்தும் அழகு மீன்களை பார்த்தலே மனதில் உற்சாகமும் அமைதியும் வந்துவிடும். இந்த வண்ண மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து சில டிப்ஸ்…

பொதுவாக சின்ன தொட்டிகளை விட பெரிய தொட்டிகளை பராமரிப்பது சுலபமாகும். மீனின் ஆயுட்காலம் நீடிக்கும். மீன்களை, முக்கியமாக தங்க மீன்களை பவுலில் போடவே கூடாது. அதில் போட்டால் மீன்கள் சுற்றி வர போதுமான இடம் கிடைக்காமல், வேகமாக இறக்க கூடும்.
Colored fish and tank maintenance
மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை எப்போதும் முழுமையாக மாற்றக்கூடாது. ஒவ்வொரு வாரமும் 10-12 சதவீத அளவு தண்ணீரை தான் மாற்ற வேண்டும். தொட்டியில் வடிகட்டுதல் அமைப்பு நிறுவப்பட்டிருந்தால், 30-50 சதவீத தண்ணீரை ஒரு மாதத்திற்கு பிறகு கூட மாற்றலாம்.

மீன்களுக்கு என தனியாக உணவுகள் உள்ளன. தையோ, டோக்கியோ, ட்ராகோ போன்ற பிராண்ட் உணவு வைட்டமின் உணவு, பதப்படுத்தப்பட டிரை வார்மஸ் என்று பல வகைகள் உள்ளன. காலை ஒரு முறை மாலை ஒரு முறை என்று உணவளித்தால் போதும்.

பொதுவாக தூய்மையான நீரில் வளரும் மீன்களை வளர்த்தால் பராமரிப்பதும் சுலபம், செலவும் குறையும். தூய்மையான நீரில் வாழும் மீன்கள் புது சூழ்நிலைக்கு ஏற்ப சுலபமாக தன்னை மாற்றிக்கொள்ளும். இதற்கான செலவு என்று பார்த்தால், மீன்களுக்கு தேவையான உணவு, வடிக்கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் பராமரிப்பதும் சுலபம்.

மீன்கள் சுவாசிப்பதற்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படும். இல்லையென்றால், அவைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். மேலும் அவைகளின் கழிவுகள் அவைகளுக்கு விஷமாக மாறும் முன், அவைகள் நீர்த்து போய் ப்ராசஸ் செய்யப்பட்டு விட வேண்டும். இவை இரண்டையும் குறிப்பிட்ட அளவிலான நீரே செய்துவிடும். அதனால் தண்ணீரை போதுமான காலகட்டத்தில் மாற்றவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *