தமிழ் குழந்தைப் பெயர்கள்

மாரடைப்பிற்கு மன அழுத்தம் காரணமாவது எப்படி? கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்

மாரடைப்பு மற்றும் ஸ்ரோக் நோய்களுக்கு மன அழுத்தம் காரணமாக இருப்பது அனைவரும் அறிந்த விடயம் ஆகும்.

ஆனாலும் மன அழுத்தமானது மாரடைப்பு, ஸ்ரோக் ஆகியவற்றிற்கு எவ்வாறு காரணமாகின்றது என விஞ்ஞானிகள் கூட நீண்ட காலமாக அறிந்திராத நிலையில் தற்போது முதன் முறைாயக விஞ்ஞான ரீதியான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது Massachusetts General Hospital மற்றும் Harvard Medical School இனைச் சேர்ந்தவர்கள் இணைந்த நடாத்திய ஆய்வுகளின் விளைவாக மன அழுத்தம், இரத்த நாளங்களின் வீக்கம் என்பன மாரடைப்பிற்கு காரணமாக அமைவதாக  கண்டறிந்துள்ளனர்.

இவ் ஆய்வின்படி மன அழுத்தமானது நோய் எதிர்ப்பு முறைமையை செயலிழக்கச் செய்வதாகவும், இதனால் குருதியில் வெண்குருதிச் சிறுதுணிக்கைகளின் அளவு அதிகரித்து நாடி, நாளங்களில் மோசமான வீக்கம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே மிகவும் தடிப்பான நாடி, நாளத்தை உடையவர்களில் இந்த வீக்கம் தடைப்படுகின்றது.

இதன் காரணமாக நாடி, நாளங்களில் சேதம் ஏற்பட்டு மாரடைப்பு, ஸ்ரோக் நோய் ஏற்படுதாக கண்டறியப்பட்டுள்ளது.

heart_attack

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *