தமிழ் குழந்தைப் பெயர்கள்

பிரசவத்தின் போது ஏற்படும் தழும்பை மறைக்கணுமா? உங்களுக்கான டிப்ஸ்

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு அடிவயிற்றில் தழும்புகள் ஏற்படுகின்றன.

ஏனென்றால் நம் உடம்பில் உள்ள தசைகள் சுருங்கும் போது கொழுப்புகள் படிந்து டெர்மிஸ் உடைகிறது, இதனால் தழும்புகள் உண்டாகின்றன.

இத்தழும்புகள் வருவதற்கு முன் நாம் அன்றாடம் உணவில் விட்டமின் E உள்ள எண்ணெய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால் இதனை தடுக்கலாம்.

பிரசவத்திற்கு பின் தழும்புகளை தடுக்க சிம்பியான டிப்ஸ் இதோ,

தேவையானவை

மாம்பழ பட்டர்- அரை கப்

தேங்காய் எண்ணெய்- கால் கப்

விட்டமின் E -1 கேப்ஸ்யூல்

Tamanu Oil – 2 டேபிள் ஸ்பூன்

பாதாம் போன்ற வாசனை எண்ணெய்- சில துளிகள்

தழும்பை மறைக்கணுமா

செய்முறை

முதலில் மாம்பழ பட்டரை உருக்கி அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து அதை கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெந்நீரில் அந்த கிண்ணத்தை வைத்து சூடுபடுத்த வேண்டும்.

பின்னர் இதில் தமனு எண்ணெய், விட்டமின் E கேப்யூல் மற்றும் ஏதாவது ஒரு வாசனை எண்ணெயை கலந்து நன்றாக கலக்கி, காற்று புகாமல் ஒரு பாட்டிலில் வைக்கவும்.

தினமும் இதனை இரு வேளைகளிலும் தழும்பு உள்ள பகுதிகளில் தடவி வந்தால், தழும்புகள் விரைவில் மறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *