தமிழ் குழந்தைப் பெயர்கள்

பறவைகளின் இனங்களைக் கண்டறியும் அப்பிளிக்கேஷன்

பறவைகளின் புகைப்படங்களை தரவேற்றுவதன் மூலம் அவற்றின் இனங்களைக் கண்டறியும் ஒன்லைன் அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Merlin Photo ID எனும் இந்த அப்பிளிக்கேஷனை இணையத்தளத்தின் ஊடாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எனினும் தற்போது இதன் ஊடாக வட அமெரிக்காவில் உள்ள 400 வகையான பறவை இனங்களை மட்டுமே அடையாளம் காணக்கூடியதாக காணப்படுகின்றது.

இதனை Cornell பல்கலைக்கழத்துடன் இணைந்து Visipedia நிறுவனம் உருவாக்கியுள்ளது.

பயனர்கள் பறவைகளின் புகைப்படங்களை தரவேற்றம் செய்ததன் பின்னர் தோன்றும் செவ்வக வடிவிலான பகுதியில் பறவையை உள்ளடக்கி பின்னர் சொண்டு, கண், வால், வயிற்றுப்பகுதி என்பவற்றினை அடையாளம் காட்ட வேண்டும்.

இதனை துல்லியமாக அறிந்து குறித்த பறவையின் இனத்தை இவ் இணையத்தளம் எடுத்துச் சொல்கிறது.

bird_generation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *