உங்கள் சமையலறையில் அல்லது பிரிட்ஜில் நீங்கள் தினமும் பார்ககும் தக்காளியின் அரும்பெரும் ஆரோக்கிய குணங்களை தெரிந்து கொள்வோம்.
1. இயற்கையான நார்ப்பொருள் பைபர் (Fiber) தக்காளியில் நிறைய உள்ளது. இது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ப்ராஸ்ட்ரேட் கேன்சருக்கு எதிரான சக்தியை உடலுக்குத் தருகிறது.
2. உடலில் கால்சியத்தின் அளவை சரியான அளவில் மெயின்டெய்ன் செய்வதில் தக்காளி பால் மற்றும் பால் பொருள்களுக்கு இணையானது.
3. வயிற்று போக்கு (Diarrhea) வராமல் தடுக்க உதவும். சிறுநீரகக் கல், பித்தப்பை (Gall Bladder) கல் தோன்றாமல் தடுக்க தக்காளி ஜுசை தினமும் குடிப்பது நல்லது.
4. இரத்தம் உறைதலை (Blood Clots) தடுக்கிறது.
5. தலைமுடியின் ஆரோக்கியத்தைக் காத்து தலைமுடியை பளபளப்பாக வைத்திருக்க உதவும். தலைமுடியை பலப்படுத்தி அதை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவும் வைட்டமின் K தக்காளியில் நிறைய உள்ளது.
6. தக்காளியிலுள்ள லைக்கோபினி (Lycopene) மற்றும் பீட்டா கரோட்டின் கணயத்தில் (Pancreas) வரக்கூடிய கேன்சர் நோயை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தவை.
7. தக்காளியில் உள்ள வைட்டமின் C இரத்தத்தில் கலந்து ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் அளவைக் குறைத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. டென்ஷன் ஸ்டெரஸ் ஆகியவற்றை குறைக்கிறது.
8. இயற்கையான வைட்டமின்கள் A, C, K ஆகியவற்றுடன் அனைத்து B வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபாஸ்பரஸ் ஆகிய மினரெல்களும் தக்காளி ஜுசில் நிறைய உள்ளன.
இனி தினமும் தக்காளி ஜுசை குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.