தமிழ் குழந்தைப் பெயர்கள்

செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து

ht2308

ஜீரணம் ஆகாமல் அவதி படுவோர்கள் வீட்டிலேயே மருந்து தயாரித்து பருகலாம். வீட்டில் இருக்கும் சுண்டைக்காய், பெருங்காயம், பூண்டு, ஓமம், சீரகம் என அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களும் உடல் நலத்தை காப்பதற்கு மிகவும் உதவுகிறது. சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, நீர் மோர் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு சுண்டைக்காய் அளவு பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டு கலக்கி, 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகளை நீக்கும்.

ஓமம் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 100 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம், பூண்டு 50 கிராம், கறிவேப்பிலை 100 கிராம், தோல் நீக்கிய சுக்கு 200 கிராம் இவற்றை லேசாக நல்லெண்ணையில் வறுத்துப் பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர சொரிமானம் ஆகி வயிற்றுக் கோளாறுகள் இன்றி இருக்கலாம்.

விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிட்டால் அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம், உடல் வலி, அசதி முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் மிகவும் நல்லது. 2 பெரிய துண்டு சுக்கு, 2 ஏலக்காய் இவற்றை நசுக்கிக் கொண்டு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, முக்கால் டம்ளராக வற்றியதும் கருப்பட்டி (பனை வெல்லம்) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலநது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வந்தால் அனைவருக்கும் நல்லது. உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும்.

மேலும் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால், ஜீரணமாகும். சுக்குப் பொடியுடன் சுடுநீரைச் சேர்த்துக் குடிக்கக்வேண்டும். குடித்து முடித்த பின், சுமார் 15 நிமிடங்கள் இடது பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள். ஜீரணம் ஆவதில் சிக்கல் இருக்காது. ஒரு கைப்பிடி துவரம்பருப்பு ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், பெரிய துண்டு பெருங்காயம், 2 கைப்பிடி அரிசி, ருசிக்கு உப்பு, பத்து மிளகாய் வற்றல் இவற்றை சிறு தீயில் எண்ணை விடாமல் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 3 கைப்பிடி பொட்டுக் கடலை சேர்த்துப் பொடி செய்து பாடடிலில் நிரப்பிக் கொள்ளவும். சூடான சாதத்தில் எண்ணை அல்லது நெய் சேர்த்து சாப்பிட அஜீரணம் போகும். பசி எடுக்காமல் அவதி படுவோர்க்கு பசி எடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *