தமிழ் குழந்தைப் பெயர்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன்

அனைத்தும் முழுமையாக மெட்டல் வெளிப்பாகத்துடன் வடிவமைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன், சென்ற வாரம் இந்தியாவில்
அறிமுகமானது. சாம்சங் நிறுவனத்தின் அதிகார பூர்வ, வர்த்தக இணைய தளத்தில் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 5.5. அங்குல அளவிலான Super AMOLED டிஸ்பிளே காட்டும் முழுமையான ஹை டெபனிஷன் காட்சி கொண்ட (1920 x 1080 பிக்ஸெல்கள்) திரை, குவால் காம் ஸ்நாப் ட்ரேகன் 615 ஆக்டா கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் சிஸ்டம், சாம்சங் நிறுவனத்தின் யூசர் இன்டர்பேஸ், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, 13 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 64 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். தேவை இல்லை எனில், இரண்டாவதாக உள்ள இடத்தை மைக்ரோ எஸ்.டி. கார்ட் இயக்க பயன்படுத்தலாம். இந்த போனின் பரிமாணம் 151 x 76.2 x 6.3 மிமீ. எடை 141 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ. /3ஜி, வை பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் தரப்பட்டுள்ள பேட்டரியின் திறன் 2,600 mAh. மூன்று வகையான வண்ணங்களில் வந்திருக்கும் இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ.30,499.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *