தமிழ் குழந்தைப் பெயர்கள்

சனிக்கிரக சந்திரனின் ஏரிகள் இருப்பதாக தகவல்

PIA01482-br500-720x480சனிக்கிரக சந்திரனின் ஏரிகள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

பூமிக்கு ஒரு சந்திரன் இருப்பது போன்று சனி கிரகத்துக்கு பல சந்திரன்கள் உள்ளன. சனிக் கிரக சந்திரனில் மிகப் பெரிய சந்திரனாக டைட்டான் திகழ்கிறது.

இந்நிலையில் பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா? அங்கு உயிரினங்கள் வாழ தகுதியான சூழ்நிலை இருக்கிறதா? என்பது தொடர்பில் பல்வேறு நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கேசினி’ என்ற விண்கலத்தை சனி கிரகத்திற்கு அனுப்பியுள்ளது.

இவ்வாறு நாசாவினால் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட ‘கேசினி’ விண்கலத்தினால் வழங்கப்பட்ட பல தகவல்களின் அடிப்படையில் டைட்டானில் ஏரிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டைட்டான் சந்திரனில் நில அரிப்பு ஏற்படுவதையும் விஞ்ஞானிகள் ஒப்பிட்டு பார்த்தனர்.

அதில் அங்கு தண்ணீரில் கரையக்கூடிய சுண்ணாம்புக் கல், ஜிப்சம் பாறைகள் மழை மற்றும் தண்ணீரால் அரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சனிக்கிரக சந்திரனில் ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

– See more at: http://athavanit.com/?p=234329#sthash.nyQ3U6HY.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *