தமிழ் குழந்தைப் பெயர்கள்

கூகுளின் Android Wear சாதனத்தில் செல்பேசி வசதி

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுவரும் Android Wear எனும் கைப்பட்டிகளில் விரைவில் செல்பேசி வசதி இணைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் குறித்த சாதனத்தை Bluetooth அல்லது WiFi தொழில்நுட்பத்தின் ஊடாக செல்பேசிகளுடன் இணைத்தே பயன்படுத்த முடிந்தது.

இதன்மூலம் செல்பேசிகள் உடனிருக்காத சந்தர்ப்பங்களில் அழைப்புக்களை ஏற்படுத்துபவர்கள், குறுஞ்செய்திகளை அனுப்புபவர்கள் தொடர்பான தகவல்களை இலகுவாக பெறமுடிந்தது.

இவ்வாறான நிலையிலேயே கூகுள் நிறுவனம் மேற்கண்ட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை செல்பேசி வசதி கொண்ட முதலாவது Android Wear சாதனமாக LG Watch Urbane 2 காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

google_watch

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *