தமிழ் குழந்தைப் பெயர்கள்

காதலர்கள் அறிய வேண்டியவை

காதல் எந்த நேரத்திலும் வரலாம். காதலர்கள் தனிமையாக இருப்பதற்காக எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள். அவ்வாறு
தனிமையில் இருக்கும் போது, வாழ்க்கையைப் பற்றி தான் பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் அந்த தனிமை நீளும் போது, தவறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
Love problem
ஆனால் காதலில் இருவருக்குள் தவறுகள் ஏற்படாமல் இருந்தால், மிகவும் நல்லது. மேலும் அந்த வாழ்க்கையும் நன்றாக இருக்கும். இன்றைய காதலில் ஆண்களும் பெண்களும் விரைவில் அவசரப்படுகிறார்கள். இவ்வாறு அவசரப்பட்டால், அந்த காதலில் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும்.

ஏனெனில் தவறு செய்வதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஆர்வம் சற்று வித்தியாசமாக இருக்கும். அதிலும் காதல் செய்யும் போது கட்டுப்பாட்டுடன் எந்த தவறும் செய்யாமல், காத்திருந்து திருமணத்திற்கு பின் எதையும் செய்து பார்த்தால், அப்போது ஏற்படும் இன்பத்திற்கும், ஒரு வித கிக்கிற்கும் அளவே இருக்காது.

மேலும் அதனால் அவர்களது காதல் வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடித்து, காதலில் வெற்றியான திருமணமும் செய்து விடலாம். ஆனால் அதுவே திருமணத்திற்கு முன்னரே, தவறு செய்து விட்டால், இருவருக்குள்ளும் ஒரு வித மனசஞ்சலம் ஏற்பட்டுவிடும்.

அதனால் ஒருவருக்கு ஆசை ஏற்பட்டு மற்றவருக்கு ஆசை ஏற்படாமல் போய், அந்த நேரத்தில் சண்டைகள் எழுந்து, இந்த காரணத்திற்காக தேவையில்லாத சந்தேகம், கோபம் போன்றவை எழுந்து, உண்மையான காதலுக்கான மதிப்பை அது அழித்துவிடும்.

அதிலும் பெரும்பாலும் விரைவில் கிடைக்காத பொருளின் மீது அதிக ஆசை, ஆர்வம் போன்றவை இருக்கும். அதேப்போல் தான் காதலில் இருவரும் இணைவது என்பது விரைவில் கிடைக்கப்பெறாமல் இருக்க வேண்டும். அவ்வாறு கிடைத்துவிட்டால், பின்னர் எந்த ஒரு ஆசையும், ஆர்வமும் இல்லாமல் போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *