தமிழ் குழந்தைப் பெயர்கள்

கணவன்மார்களே உங்களிடம் மனைவிக்கு பிடிக்காத விடயங்கள்!

திருமண பந்தத்திற்கு பிறகு ஆண் பெண் இருபாலரும் தங்கள் வாழ்க்கையை நல்லறமே இல்லறமாய் ஆரம்பிக்கின்றனர்.

ஆனால் நாட்கள் செல்ல ஒருவருக்கொருவர் பிடிக்காத விடயங்கள் கண்களுக்கு தென்படுகின்றன.

இதில் மனைவிமார்கள், தங்கள் கணவருக்கு பிடிக்காத விடயங்களை மாற்றிக்கொள்ள சற்றே முயற்சிசெய்தாலும், கணவன்மார்கள் முயற்சி கூட செய்வதில்லை.

அந்த வகையில் கணவன்மார்களே உங்களிடம் மனைவிக்கு பிடிக்காத விடயங்கள் சில,husband_wifeproblem

1. குளித்தால், கை,கால், முகம் கழுவினால் ஈரம் சொட்ட, சொட்ட வந்து வீட்டையே ஈரமாக்குவது. மொசைக் தரையாக இருந்தால் அடுத்தவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்களே என்ற கவலை எல்லாம் கிடையாது. அப்படி வழுக்கி விழுந்து காலை ஒடித்துக் கொண்ட மனைவிகளும் உண்டு.

2. புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் புகைபிடிப்பது. அதிலும் ரயில் என்ஜின் மாதிரி வீட்டுக்குள்ளேயே புகைவிடுவது மனைவிகளை எரிச்சலின் உச்சத்திற்கே கொண்டு செல்லும். அந்த பாழாய்ப்போன சிகரெட்டை வெளியே சென்று பிடிப்பது.

3. காலையில் எழுந்தால் போர்வையை மடித்து வைக்கும் பழக்கமே இல்லை. நான் ஏன் மடிக்க வேண்டும் அதான் சம்பளம் இல்லாத வேலைக்காரி (மனைவி) இருக்கிறாளே என்ற நினைப்பு.

4. உடை மாற்றினால் அதை சோபாவிலோ, தரையிலோ அல்லது துவைத்த துணிகளுக்கிடையே போட்டுவிட்டுச் செல்வது.

5. நேரம் காலமில்லாமல் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது. கணவனுக்கு இது பிடிக்குமே என்று ஆசையாக சமைத்தால் உடனே நண்பர்களை சாப்பிட வரச் சொல்வது.

6. எங்கம்மா எவ்வளவு நல்லா சமைப்பாங்க தெரியுமா, என் அக்கா எப்படி பம்பரமா வேலை பார்ப்பா தெரியுமா என்று புராணம் பாடுவது.

7. வெளியே அழைத்துச் செல்வேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அதை மறந்துவிடுவது.

8. நேரம் போவதே தெரியமால் அலுவலகத்தை கட்டி அழுவது.

9. ஏதாவது ஆசைப்பட்டு கேட்டால் அது உடல்நலத்திற்கு கேடு என்று கூறி வாங்கித் தர மறுப்பது.

10. அலுவலகப் பிரச்சனைகளால் மண்டகாஞ்சுபோய் வீட்டுக்கு வந்து மனைவியை திட்டுவது.

நன்றி

lankasritechnology

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *