தமிழ் குழந்தைப் பெயர்கள்

கணனியில் அறிய வேண்டிய கல்ப் தகவல்கள்

Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி
பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் விரும்பும்போது இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் விஸ்டா ஸ்டார்ட் மெனு, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலாக உள்ள பாதிப் பிரிவு, இது போன்ற பின் செய்யப்படும் புரோகிராம்களுக்கானது. எந்த புரோகிராம்களை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமோ, அவற்றை இதில் பதிந்து வைக்கலாம்.

Bloatware: ப்ளோட் வேர் என நாம் அழைப்பவை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களால், தாங்கள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அனுப்பப்படும் புரோகிராம்களாகும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, இப்போது, மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், குரோம் புக், ஐபேட் போன்ற சாதனங்களிலும், நாம் கேட்காத, விரும்பாத பல புரோகிராம்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன. இவற்றை நாம் கம்ப்யூட்டரை அல்லது மேலே குறிப்பிட்டுள்ள சாதனங்களைப் பெற்றவுடன், இவற்றை நீக்கிவிடலாம். இதனால், தேவையின்றி நம் ராம் மெமரி இடம் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *