தமிழ் குழந்தைப் பெயர்கள்

ஏசர் ஒன் லேப்டாப்-டேப்லெட் ஹைப்ரிட்

ஏசர் நிறுவனம் ஏசர் ஒன் 2இன் 1 லேப்டாப்-டேப்லெட் ஹைப்ரிட் அமேசான் இந்தியாவில் பிரத்தியேகமாக கிடைக்கிறது மற்றும் ஏசர் ஒன்
S1001 என்றும் அழைக்கப்படுகிற இந்த விண்டோஸ் அடிப்படையாக கொண்ட ஹைப்ரிட் ரேம் 1ஜிபி (DDR3L) மாடல் ரூ.19,999 விலையிலும் மற்றும் ரேம் 2ஜிபி (DDR3L) மாடல் ரூ.21,999 விலையில் கிடைக்கும். இந்த ஏசர் ஒன் லேப்டாப்-டேப்லெட் ஹைப்ரிட்டின் சிறப்பம்சமாக நான்கு வித்தியாசமான மோட்களில் பயன்படுத்தப்படும், அதாவது நோட்புக் மோட், பேட் மோட், டிஸ்ப்ளே மோட் மற்றும் டென்ட் மோட் ஆகும். ஒரு ஒருங்கிணைந்த 500GB ஹார்ட் டிஸ்க் டிரைவ் உடன் தொகுக்கப்பட்ட கீபோட்டு வருகிறது, இதை மேக்னடிக் ஏசர் ஸ்நெப் ஹிஞ் வழியாக டேப்லட் டிஸ்ப்ளே உடன் பொருத்திக்கொள்ளலாம்.

இந்த லேப்டாப்-டேப்லெட் ஹைப்ரிட் அம்சங்களாக, 1280×800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10 இன்ச் HD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் இன்டெல் HD கிராபிக்ஸ் ஒருங்கிணைந்த ஜி.பீ.யூ உடன் இணைந்து 64-பிட் இன்டெல் ஆட்டம் Z3735F பிராசசர் (2எம்பி கேச், 1.3GHz அடிப்படை அதிர்வெண் (base frequency), 1.8GHz வெடிப்பு அதிர்வெண் (burst frequency), 4 கோர்கள், 4 த்ரட்கள்) மூலம் இயக்கப்படுகிறது.

விண்டாஸ் 8.1 அடிப்படை கொண்ட லேப்டாப்பில் 2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. இந்த லேப்டாப்-டேப்லெட் ஹைப்ரிட்டில் 6000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இதன் இணைப்பு விருப்பங்கள், 2xUSB2.0 போர்ட்கள், 1xHDMI போர்ட், Wi-Fi 802.11 b/g/n, மற்றும் ப்ளூடூத் v4.0 ஆகியவை வழங்குகிறது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் மற்றும் ஆம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

ஏசர் ஒன் லேப்டாப்-டேப்லெட் ஹைப்ரிட் அம்சங்கள்:

1280×800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10 இன்ச் HD டிஸ்ப்ளே,
1.3GHz இன்டெல் ஆட்டம் Z3735F பிராசசர்,
மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
ரேம் 1ஜிபி,
2 மெகாபிக்சல் பின்புற கேமரா,
0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
2xUSB2.0 போர்ட்கள்,
1xHDMI போர்ட்,
Wi-Fi 802.11 b/g/n,
ப்ளூடூத் v4.0,
விண்டாஸ் 8.1,
6000mAh பேட்டரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *