தமிழ் குழந்தைப் பெயர்கள்

உலகின் சிறிய கணனிகள்

முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கணனிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆனால் அத்தகைய கணணிகள் அளவில் பெரிதாக இருந்தன. நினைத்த இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இல்லை. அதுமட்டுமல்லாது அதன் பயன்பாட்டு அளவும் மிகக் குறைவாகவே இருந்தது.

நாளடைவில் இந்த கணனி வடிவத்திலும், பயன்பாட்டிலும் வியக்க வைக்கும் விதத்தில் மாறியது.

ஆரம்ப கட்டத்தில் பல விதமான கணனிகள் உருவாக்கப்பட்டாலும், சார்லஸ் பாப்பேஜ் என்ற இயந்திர  பொறியாளர் தான் programmable கணனிகளை உருவாக்கினார். அதில் இருந்து தான் கணனி தொழிநுட்பம் வளர்ச்சியடைத் தொடங்கியது.

இதன் காரணமாக கணனி பயன்பாட்டை இடைவிடாமல் பயன்படுத்த மக்கள் விரும்பினர். இதற்காக சிறிய வடிவிலான மடி கணனிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அதுவும் அலுத்துப் போய்விடும் நிலைக்கு வந்துவிட்டதால் அதைவிட சிறிய வடிவிலான கணனிகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

பெரிய வடிவிலான கணனிகளை எப்படி அளவில் குறைப்பது என்று ஆராய்ந்து உருவாக்கப்பட்டது தான் சிறிய வடிவிலான கணனிகள். தற்போது இவையும் சந்தைகளை கலக்கிக் கொண்டுள்ளன.

Raspberry pi

Raspberry pi ஸ்மார்ட் போன் போன்றே யூஎஸ்பி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதன் விலை குறைவு என்பதால் அதிக பேர் இதைப் பயன்படுத்துகின்றனர்.

Intel nuc

ஒரு சிறிய பெப்ஸி பாட்டிலின் உயரமே உள்ள இதன் விலையானது raspberry pi விட சற்று அதிகம். இதனை intel நிறுவனம் தயாரித்துள்ளது.

Asus chromebox

asus chromebox சற்று பெரியதாக இருக்கும். ஆனால் கைகளுக்கு அடக்கமாக இருக்கும். இது சந்தைகளில் 160 டொலருக்கு கிடைக்கிறது.

Hp stream mini

hp stream mini கருவியின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் நல்ல வரவேற்பு இதற்கு உள்ளது. Windows 8.1 இயங்குதளத்தோடு அசத்தலாக இருக்கும் இதன் விலை 180 டொலர் ஆகும்.

Mintbox mini

mintbox mini கருவியில் hp stream mini விட அதிக பயன்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு அழகாகவும், அளவிலும் பொறுத்தமாக இருக்கிறது.

Intel compute stick

intel compute stick தான் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்ததாக இருக்கிறது. இது pentrive வடிவில் சந்தைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இவை மட்டுமல்லாது vensmile, zotac express, android strick ஆகியவையும் அதிகம் விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த கருவிகள் செய்யும் வேலைகளை தற்போது ஸ்மார்ட் போனே செய்து முடிக்கும் நிலைமையும் வந்துவிட்டது.

small_computer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *