தமிழ் குழந்தைப் பெயர்கள்

உச்ச நடிகை ராதிகா ஆப்தே

டோனி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியாக நடித்தாலோ என்னவோ அழகும்,
திறமையும் இருந்தும் அவரை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை. ஆல் இன் ஆல் அழகுராஜாவில் சிறிய கேரக்டரில் நடித்தார், வெற்றிச் செல்வன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த அந்தப் படம் தோல்வியையும் அடைந்தது.
actress_radhika_apte
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ராதிகா ஆப்தே மராட்டியம் மற்றும் இந்திப் படங்களில் நடித்து வந்தார். டோனி படத்தின் மூலப் படத்திலிலும் அவர் நடித்திருந்தார். அதனால் அதே கேரக்டருக்கு பிரகாஷ்ராஜ் அவரை தமிழுக்கு அழைத்து வந்தார். தமிழ் சினிமா கைவிட்டாலும் இன்றைய தேதியில் இந்தியாவிலேயே அதிக படங்களில் நடித்து வருகிறவர் ராதிகா ஆப்தே.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை போஸ்ட்கார்ட், லை பஹாரி (மராத்தி), பெண்டுலம் (பெங்காலி), லெஜண்ட் (தெலுங்கு), வெற்றிச் செல்வன் (தமிழ்), படங்கள் வெளிவந்துள்ளன. மன்ஜினி, ஹண்டரர், தி ப்ரைட் டே, கவுன் கித்னே பானி மெய்ன், எக்ஸ், தி பீல்டு, ஆகிய இந்திப் படங்களிலும், பர்ச்சட் என்ற ஆங்கில படத்திலும், உலா என்ற தமிழ் படத்திலும், ஹரம் என்ற மலையாளப்படத்தில் பஹத் பாசில் ஜோடியாகவும் நடித்து வருகிறார். உண்மையில் இந்திய நடிகை என்றால் அது ராதிகா ஆப்தேதான்.

[review]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *