தமிழ் குழந்தைப் பெயர்கள்

உங்க வீட்டு சுட்டி நல்லா ஹெல்தியா வளரணுமா?

இந்த காலகட்டத்தில் குழந்தைகளை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ப்பது என்பதே தாய்மார்களுக்கு கஷ்டமான காரியமாக உள்ளது.
ஆனால் அந்த காலத்தில் எல்லாம் இயற்கையான உணவை உண்டு குழந்தைகள் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக வளர்ந்தன.

தற்போது நம்முடைய உணவுப் பழக்க, வழக்கமே மாறிப் போய் விட்டது. இதனால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க வேண்டியது அவசியம்.

இல்லத்தரசிகள் நேரத்தை கொஞ்சம் செலவிட்டு, முயற்சி செய்தாலே வீட்டிலேயே ஊட்டச்சத்து மிக்க பவுடரை தயார் செய்து விடலாம்.

குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் சத்தான பானமாக இருக்கும்.

இதில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கலோரி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, பி1, பி2, நையாசின், பி6, போலிக் ஆசிட், கோலின், வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரின், மாலிப்டினம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

தேவையான பொருள்கள்

கேழ்வரகு- 150 கிராம்
கம்பு- 150 கிராம்
சோளம்- 100 கிராம்
சம்பாக்கோதுமை- 100 கிராம்
மக்காச்சோளம்- 100 கிராம்
புழுங்கல் அரிசி- 75 கிராம்
ஜவ்வரிசி- 25 கிராம்
பார்லி- 50 கிராம்
பாசிப்பயறு- 100 கிராம்
பொட்டுக்கடலை- 100 கிராம்
சோயாபீன்ஸ்- 20 கிராம்
நிலக்கடலை- 20 கிராம்
முந்திரிப் பருப்பு- 5 கிராம்
பாதாம் பருப்பு- 5 கிராம்
ஏலக்காய்- 2 கிராம்.

செய்முறை

கேழ்வரகு, கம்பு, சோளம், பாசிப் பயறு ஆகியவற்றைச் சுத்தம் செய்து நீரில் ஒருநாள் ஊற வைக்கவும்.

பின்னர் துணியில் முடித்து முளைக்கட்ட வைக்க வேண்டும். (ஓரிருநாளில் முளைகட்டி விடும்) சம்பா கோதுமை, மக்காச் சோளத்தை 2 நாள் ஊறவைத்து, பின்னர் வெயிலில் ஓரிருநாள் காயவைக்க வேண்டும்.

அதன்பின் எல்லாப் பொருள்களையும் தனித்தனியாக மிதமான சூட்டில் தீய்ந்துவிடாமல் வறுக்க வேண்டும். அதன்பின் மொத்தமாக மாவாக அரைத்துக் கொள்ளலாம்.

பானம் தயாரிக்கும் முறை

பவுடர் 20 கிராம், 150 மி.லி. பால் அல்லது தண்ணீர், தேவையான அளவு சர்க்கரை கலந்து அடுப்பில் வைத்து கூழ் பதத்துக்கு காய்ச்சி, மிதமான சூட்டில் பருகலாம். இதில் பால்பவுடர் கொஞ்சம் கலந்துகொண்டால் சுவை இன்னும் அதிகரிக்கும்
healthy_001

[review]
lankasritechnology

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *