தமிழ் குழந்தைப் பெயர்கள்

ஆண்மகனே…உங்களுக்கு எங்க மச்சம் இருக்கு?

பொதுவாகவே உடலில் மச்சம் இருந்தாலே அதிர்ஷ்டம் என்று தான் சொல்வார்கள்..எந்த இடத்தில் உள்ளது என்பதை பொறுத்து பலன்களும் வேறுபடும்.

நாம் இப்போது ஆண்களுக்கான மச்ச பலன்களை பார்ப்போம்.

கண்ணின் இரு புருவங்களுக்கு மத்தியில்- ஆயுள் பலம் அதிகம்.

நெற்றியின் வலது பக்கத்தில்- தனயோகம்.

நெற்றியின் வலது புருவத்தில்- திருமணத்தால் யோகமும், திருமணத்திற்கு பிறகு யோகமும் வரும்.

வலது கண்ணுக்கு அருகில்- பழகும் நண்பர்களால் நன்மை உண்டு.

இடது புருவத்தில்- வாழ்க்கை ஏற்ற இறக்கமாக அமையும். செலவாளியாக இருப்பார்.

மூக்கின் மேல்- கவலை இல்லாத ராஜா. வாழ்க்கை சுகபோகமாக அமையும்.

மூக்கின் வலது புறம்- நினைத்தது நடக்கும், அது நினைத்த மாதிரியே நடக்கும்.

மூக்கின் இடது புறம்- நல்ல நண்பர்கள் அமைய மாட்டார்கள். அமையும் நண்பர்களும் சுய ஆதாயத்தோடு பழகுவார்கள். பெண்களால் அவமானம், அவப்பெயர் உண்டாகும்.

மூக்கின் நுனியில்- தான் என்ற எண்ணம் கொண்டவராக, தனக்கு மிஞ்சி எதுவும் இல்லை என்று நினைப்பவராக, பிறர் வளர்ச்சியில் பொச்சரிப்பு கொண்டவராக இருப்பார்.

உதட்டின் மேல் பகுதி அல்லது உதட்டின் கீழ் பகுதியில்- நிறைய அலச்சியம் இருக்கும். அதை விட அதிகமாக பெண்ணாசை இருக்கும். சபல பேர்வழிகள்.

உதட்டுக்கு மேலே அதாவது மீசை இருக்கும் பகுதியில்- கலைத்துறை நாட்டம் உள்ளவர்கள். இசை பிரியர்கள்.

வலது கன்னத்தில்- மற்றவரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். இரக்க குணம், தயாள சிந்தனை உள்ளவர்கள்.

இடது கன்னத்தில்- வாழ்க்கை ஊஞ்சல் மாதிரி ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும்.

கழுத்தின் வலது புறம்- சொத்துக்கள் சேரும், ஆடம்பரமான வாழ்க்கை அமையும்.

கழுத்தின் இடது புறம்- பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும்.

இடது மார்பில்- பெண்களால் விரும்பபடுவார்கள்.

வலது மார்பில்- அன்பானவர்கள். பண்பானவர்கள்.

வயிற்றில்- பொறாமை குணம் அதிகம். தங்கள் தகுதிக்கு மீறி ஆசை படுவார்கள்.

அடி வயிற்று பகுதியில்- திடீர் அதிஷ்டம் வரும்.

இடது தொடையில்- மாற்றி மாற்றி பேசுவார்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை.

வலது தொடையில்- ஆணவம், எடுத்தெறிந்து பேசும் குணம் கொண்டவர்கள்.

வலது காலில்- சுகமான வாழ்க்கை.

இடது காலில்- வரவும் செலவும் சரியாக இருக்கும்.
men_mole

[review]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *