தமிழ் குழந்தைப் பெயர்கள்

அலுவலக காதல்

office_love

மனதிற்குள் எழும் ஒரு விதமான உணர்வே காதல் எனப்படுகிறது.

ஆனால், காதல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் கிடைக்கும்.

பள்ளிக்காதல், பருவக்காதல், கல்லூரிக்காதல் என பலதரப்பட்ட காதல் இருந்தாலும் ஒரே அலுவலகத்தில் ஏற்படும் காதல் சற்று பிரச்சனையான ஒன்றுதான்.

அலுவலகம் Vs காதல்

வேலையில் கவனக் குறைவு

வேலை பார்க்கும் இடத்திலே காதல் வசப்படுவது, வேலையில் இருக்கும் அவர்களது கவனத்தை குறைத்துவிடுகிறது. திறமையானவர்கள்கூட காதல்வசப் படும்போது, திறமையை பணியில் காட்டாமல் காதலில் காட்டிவிடுகிறார்கள்.

அதனால் தவறுகள் நிகழும்போது, அலுவலகத்தில் பிரச்சனைகள் தோன்றும். காதலனும், காதலியும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும்போது ஒருவர் மீதுதான் இன்னொருவர் கவனம் இருக்குமே தவிர, வேலையின் மீது முழு கவனமும் செல்லாது.

ஒரு ஜோடி காதலிப்பது தெரிந்துவிட்டால், இருவரில் யார் இயல்பாக தவறு செய்தாலும், அதற்கு காதல் சாயம் பூசிவிடுவார்கள். அதனால் தவறு பெரிதாக்கப்பட்டு, வேலையையே இழக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்.

குறுஞ்செய்திகள்

அலுவலக நேரத்தில் வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுப்புவது, குறுஞ்செய்திகள் அனுப்புவது இதெல்லாம் எவ்வளவு நேரத்தை வீணடிக்கச் செய்யும் என்பது தெரியுமா? ஒன்றுமில்லாத விடயத்திற்கெல்லாம் ‘மெசெஜ்’ அனுப்புவார்கள். அதற்கு பதில் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் வேலையில் இருந்த கவனம் சிதறிவிடும்.

இதெல்லாம் அலுவலகத்தில் தேவையற்றது. இது வேலையை முற்றிலுமாக பாதிக்கச் செய்துவிடும்.

தவறுகளை மறைத்தல்

மேலதிகாரியாக இருப்பவர் ஆண் என்றால், அவருக்கு கீழ் வேலை பார்க்கும் அனைத்து பெண்களையும் அவர் சமமாக பாவிக்கவேண்டும். அவர், அந்த பெண்களில் ஒருத்தி மீது காதல்வசப்பட்டுவிட்டால் அவளுக்கு சாதகமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.

அவளுக்கு நிறைய சலுகைகளை வழங்குவார். அவள் செய்யும் தவறுகளையும் மறைத்துவிடுவார். சிலரோ தன் காதலி செய்யும் தவறை மறைக்க, வேறு யார் மீதாவது அந்த பழியை போட்டுவிடவும் செய்வார்கள்.

அவர்கள் இருவரும் அலுவலகத்தில் இருக்கும்போது தங்கள் பணி என்ன என்பதை மறந்து காதல் கொள்ளும்போது, அடுத்தவர்களுக்கு கேலிப்பொருளாகவும் அவர்கள் மாறிவிடுவார்கள்.

நண்பர்களை புறக்கணித்தல்

காதலிக்கும்போது காதலி, காதலனை நோக்கியும்– காதலன், காதலியை நோக்கியும் ஈர்க்கப்படுகிறார்கள்.

இதனால், அதுவரை அவர்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த நண்பர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அந்த நண்பர்களின் உதவி அலுவலக பணிக்கு தேவை என்கிற நிலையில் அவர்களை புறக்கணித்தால், அதன் மூலம் அலுவலக பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுவிடும்.

தேவையற்ற பேச்சு

அலுவலக வேலை என்பது எல்லோருக்குமே ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அந்த அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்று, மீண்டும் மனதை உற்சாகப்படுத்திக்கொள்ள அலுவலக நேரத்தில் இடைவெளி கிடைக்கிறது. அந்த சில நிமிட நேரத்தை பயனுள்ள வழியில் கழிப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.

ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்கும்போது அலுவலக ஓய்வு நேரத்தை, நல்லபடியாக கழிக்கிறார்கள். அந்த நேரத்தில்கூட தங்கள் பணி பற்றியும், அலுவலக வேலை சூழல் பற்றியும் விவாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் காதலர்களாகிவிட்டால், அவர்கள் பேச்சு முழுவதும் காதலை சுற்றித்தான் செல்கிறது. அரட்டை அடிப்பது, பொழுதுபோக்குவது போன்று நேரத்தை செலவிட்டு விடுகிறார்கள்.

கண்காணிப்பு

இப்போது அலுவலகங்களில் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாண்டு கண்காணிக்கிறார்கள். மனிதர்களின் கண்களில் இருந்து தப்பித்தாலும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கமெராக்களின் கண்களில் இருந்து தப்ப முடிவதில்லை.

காதலர்கள் அலுவலகத்தில் எவ்வளவு கவனமாக இருந்து காதலை வளர்த்துக்கொண்டிருந்தாலும், விரைவாகவே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறார்கள்.

காதல் கொள்வது தவறில்லை, ஆனால் அவ்வாறு காதல் வயப்பட்டாலும், அந்த காதலை பொறுமையாக வெளிப்படுத்தி, அலுவலகத்தில் நாகரீகமாக நடந்துகொண்டு, அலுவலகப்பணிகளையும் சரியான முறையில் கையாண்டால் எவ்வித பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.

 

 

 

 

நன்றி

lankasritechnology

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *