மன நோய்களை உருவாக்கும் தனிமை!

305
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

shutterstock_147685301-1280x960-730x400

மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட அவுஸ்திரேலிய ஆய்வொன்று, தனிமையானது மன அழுத்தம், சமூக கவலை, மற்றும் சித்த சம்மந்தமான மன நோய்களை ஏற்படுத்தக் கூடியது என சொல்கிறது.

இந்த ஆய்வானது கிட்டத்தட்ட 1000 பேர்களில் 6 மாத காலமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்துடன் சமூக கவலையுள்ளவர்கள் எதிர்காலத்தில் தனித்துப் போகும் வாய்ப்புக்களிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தனிமையானது நாம் எவ்வளவு நேரம் தனித்து இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, பழகும் மற்றவர்களின் தன்மையும் அதில் அடங்கும் என ஆய்வாளர் Michelle Lim சொல்கிறார்.

அவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 18 – 87 வயதுக்கிடைப்பட்ட 1010 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஏற்படும் மன நிலை மாற்றங்கள் 6 மாதங்களாக மூன்று online ஆய்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இது தொடர்பான தகவல்கள் Abnormal Psychology எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது