ப்ரீயா நடிக்கும் நந்திதா

364
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல படங்களில நடித்திருப்பவர் நந்திதா. இவர் நடித்த
அனைத்து படங்களுமே வெற்றி பெற்றிருப்பதால் இப்போது கோலிவுட்டில் இவர் ராசியான நடிகையாகி விட்டார். குறிப்பாக, லட்சுமிமேனனை ராசியான நடிகை என்று சொல்லி வந்தவர்கள் இப்போது இவர் பக்கம் திரும்பி நிற்கின்றனர்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கவர்ச்சி விசயத்தில் தொடர்ந்து நோ சொல்லி வரும் நந்திதா. சம்பள விசயத்தில் கறார் செய்வதில்லை. என் கண்டிசனுக்கு நீங்கள் ஓகே என்றால் நீங்கள் சொல்லும் சம்பளத்தில் நடிக்க நானும் ரெடி என்று கூறி வரும் நந்திதா, தற்போது தனது திறமையை மேலும் வெளிச்சம் போடும் விதமாக உப்புக்கருவாடு என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டபோதும், வெயிட்டான கதைகள் பக்கமும் திரும்பி நிற்கும் நந்திதாவிடம், கழுகு கிருஷ்ணா- மா.கா.பா.ஆனந்த் இணைந்து நடித்த வானவராயன் வல்லவராயன் பட்த்தை இயக்கிய ராஜ்மோகன், சமீபத்தில் ஒரு கதை சொன்னாராம்.

அந்த கதையைக்கேட்ட நந்திதா, அசந்து போனாராம். இந்த படத்தில் மட்டும் என்னை நாயகியாக நடிக்க வைத்தால் நான் சம்பளமே வாங்க மாட்டேன் என்றாராம். காரணம், அந்த அளவுக்கு முழுக்க முழுக்க கதாநாயகியை முதன்மைப்படுத்தும் விதத்தில் பக்கா நேட்டிவிட்டியாக அந்த கதை இருந்ததாம். இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்தால் இன்றைய சூழலில் நூறு படங்களில் நடித்ததற்கு சமம். அப்படியொரு கதை இது என்று சொன்னாராம் நந்திதா. அதனால் அப்படத்தின் ஸ்கிரிப்ட்டை அவசரகதியில் தயார் செய்து நந்திதாவை அப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் ராஜ்மோகன்.