நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்!

707
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய்.

பொதுவாக நெல்லிக்காயில் விட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. அதனால் இதனை எடுத்துக்கொள்ளவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதுமட்டுமின்றி, நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காகஅதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

அடங்கியுள்ள சத்துக்கள்

புரதம் – 0.4 கி, கொழுப்பு – 0.5 கி, மாச்சத்து – 14 கி, கால்சியம் – 15 மி.கிஇ பாஸ்பரஸ் – 21 மி.கி, இரும்பு – 1 மி.கி, நியாசின் – 0,4 மி.கி, விட்டமின் ´பி1` – 28 மி.கி, விட்டமின் ´சி` – 720 மி.கி, சுண்ணாம்பு, தாதுப் பொருட்கள், கலோரி – 60.

உடல் எடை

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.

ஆஸ்துமா

நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.

சிறுநீர் எரிச்சல்

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகையஎரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

அதிகமான இரத்தப்போக்கு

மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால்,சரிசெய்துவிடலாம்.

அழகான முகம்

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும்.

amulajuice