நிலக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

348
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் நிலக்கடலை விளங்குகிறது.

இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அமிலம் அதிகம் உள்ளது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது.

இதில் உள்ள மாங்கனீஸ் அமிலம், ரத்தத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் கொழுப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை உண்பது நல்லது.

நிலக்கடலையை ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்தால் பித்தம் அதிலிருந்து நீங்கிவிடும். இதனை நன்கு கழுவிவிட்டுச் சாப்பிடலாம். ஊறவைக்காமல் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும்.

ஹீமோஃபீலியா என்ற நோயால் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது.

அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் நிலக்கடலை சிறந்த உணவாகும்.

groundnut