டப்பிங்கில் மிரட்டுவரா சிம்ரன்

347
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

சிம்ரன் தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத நடிகை என்பதை யாரும் மறுக்கமுடியாது. இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு
சினிமாவில் நடிக்காமல் இருந்தார். காரணம் தனது நடிப்புக்கான வாய்ப்பு கிடைக்காதது தான் என்றார். தற்போது அதற்கான வாய்ப்பு சிம்ரனுக்கு கிடைத்துள்ளது. ஆதி இயக்கத்தில் உருவாகும் படம் த்ரிஷா இல்லேன்னா நயந்தாரா. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி ஜோடியாக நடிக்கிறார்கள். இதில் ஒரு முக்கியமான கேரக்டருக்கு பொருத்தமான நடிகையை தேடிவந்தனர் தற்போது அந்த பாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார். இதற்காக இயக்குனரிடம் கதை கேட்ட சிம்ரன், வசனத்தையும் எழுதிக்கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் டப்பிங் நான்தான் பேசுவேன் என்று கூறி ஓகே செய்துள்ளார்.