செல்பி பிரியர்களுக்கு சூப்பரான செய்தி! இதோ வந்துவிட்டது “செல்பி கை”

295
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் செல்பி குச்சிகளுக்கு மாற்றாக செல்பி கையை வடிவமைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஜப்பானை சேர்ந்த ஒருவர் செல்பி குச்சிகள் மூலம் புகைப்படம் எடுப்பதை அசவுகரியமாக உணர்ந்தார்.

எனவே செல்பி குச்சிகளுக்கு பதில் வேறு புதிய கருவியை உருவாக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.இதையடுத்து ஓன்லைன்ஷாப்பிங் நிறுவனம் ஒன்றில் இருந்து செயற்கை கைகளை வாங்கியுள்ளார்.

பின்னர் அதனுடன் செல்பி குச்சிகளை இணைத்த அவர், மொபைல் போனைப் பிடித்துகொள்வதற்கு ஏற்ப கருவிகளையும் பொருத்தினார்.

இதன் மூலம் தான் ஆசைப்பட்ட செல்பி கையை உருவாக்கினார். அடுத்ததாக இந்த செல்பி கையை மறைக்கும் விதமாக நீண்ட கைகளைக்கொண்ட ஆடையை தயார் செய்துள்ளார்.

தற்போது இந்த செல்பி கை மூலம் புகைப்படங்களை எடுக்க தொடங்கியுள்ளார்.

அவரது இந்த செல்பி கை அந்நாட்டு மக்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

selfie_hand

Picture Courtesy: @mansooon/twitter