சாம்சுங் நிறுவனத்தின் Galaxy Xcover 4 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்!

175
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

தொடர்ச்சியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் சாம்சுங் நிறுவனம் மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

Galaxy Xcover 4 எனும் இக் கைப்பேசியானது முதன் முறையாக அயர்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 4.99 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Quad Core 64-bit Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2800mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

இதேவேளை இக் கைப்பேசியினை மாதத் தவணைக் கட்டணத்தின் அடிப்படையிலும் கொள்வனவு செய்ய முடியும்.

இதன்படி மாதாந்தம் 30 யூரோக்கள் எனும் அடிப்படையில் 24 மாதங்களுக்கு செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.