சமந்தா வாய்பை தனதாக்கிய ஸ்ரீதிவ்யா

730
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

கோலிவுட்டில், எந்த நேரத்தில், எந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்; எந்தநடிகையை கைவிடும் என்பதுயாருக்குமே
தெரியாது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்வரை, பெரிய பேனர்களில் உருவான தமிழ் படங்களில் நடிக்க மறுத்து வந்தார் சமந்தா. இப்போது, காற்று திசை மாறி வீசத் துவங்கியுள்ளது. பஹத் பாசில்,நஸ்ரியா நடித்த, ‘பெங்களூரு டேஸ்’ என்ற மலையாள திரைப்படம், தமிழில் ரீ-மேக் ஆகிறது. இதில், சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை; தற்போது, சமந்தாவுக்கு பதில், ஸ்ரீதிவ்யாவை அந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால், ஸ்ரீதிவ்யாவின் முகத்தில் சந்தோஷ களைதாண்டவமாடுகிறது.