கோலிவுட் கோதாவில் காஷ்மீர் அழகி அக்ஷா பட்

292
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

குப்பி, காவலர் குடியிருப்பு, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படம் ஒரு மெல்லிய கோடு.
இதில் அர்ஜுன் ஹீரோவாகவும், ஷாம் செகண்ட் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள். இதில் ஹீரோயினாக காஷ்மீரைச் சேர்ந்த அக்ஷா பட் அறிமுகமாகிறார்.

காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை சேர்ந்த அக்ஷா பெங்களுரில் படித்து அங்கேயே செட்டிலாகிவிட்டார். இரண்டு கன்னட படங்களில் நடித்திருக்கிறார். ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். ஒரு மெல்லிய கோடு மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். இதில் அர்ஜுனுக்கு ஜோடியா நடிக்கிறார். கதைப்படி அக்ஷா மாடலிங் கேர்ளாக வருகிறார். கவர்ச்சியாகவும் நடிக்கிறார். “வடக்கு திசையில் பிறந்து தெற்கு திசைக்கு வந்திருக்கிறேன். எனக்கு கோவில் எல்லாம் கட்ட வேண்டாம் மனசுல கொஞ்சம் இடம்கொடுத்தால் போதும், தமிழ் கத்துக்கிட்டிருக்கேன்” என்கிறார் அக்ஷா பட்.