கோலிவுட்டில் மனோசித்ரா

308
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

”அவள் பெயர் தமிழரசி” படத்தில் அறிமுகமானவர் மனோசித்ரா. அதன் பிறகு நீர்பறவை வீரம், நேற்று இன்று படங்களில் நடித்தார். பெரிய வாய்ப்புகள்
இல்லாமல் மலையாளம் பக்கம் போனார். அங்கு பயனிஸ்ட் என்ற படத்திலும், மல்லியாகடு மேரேஜ் பெரூவு என்ற கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மிரண்டவன் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார். இதில் பிரஜின் ஹீரோவாக நடிக்கிறார். சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த பிரஜின் தீ பிடிக்கும் பச்சை மரம், சுற்றுலா படங்களில் நடித்துள்ளார். இவர்களுடன் சருணா, அஞ்சுகவுடா, சுவாதி, சவேரா, ஐஸ்வர்யா, ஜெஸ்சி, ஆகிய 6 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

பார்வை ஒன்றே போதுமே, பேசாத கண்ணும் பேசும், திருடிய இதயத்தை படங்களை இயக்கிய முரளி கிருஷ்ணா இயக்குகிறார் ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

“சமூகத்தில் ஒருவன் சாதுவாக இருக்க விடமாட்டார்கள். எதையாவது செய்து மிரட்டிவிடுவார்கள். அப்படி ஒருவன் மிரண்டால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. அதாவது சாது மிரண்டால் காடு கொள்ளது என்பது தான் ஒன்லைன். படத்தில் 7 ஹீரோயின்களுக்கு என்னவேலை என்பது படம் வரும்போது தெரியும். நிச்சயமாக கிளாமருக்காவோ, அல்லது கமர்ஷியலுக்காகவோ பயன்படுத்தவில்லை. நானே இசை அமைத்திருக்கிறேன். மனோசித்ரா முக்கிய ஹீரோயின் அவர் தவிர மற்ற 6 பேருக்கும் சம வாய்ப்பு கொடுத்திருக்கிறேன்” என்கிறார் முரளி கிருஷ்ணா.