குழந்தை திருமணத்தை தடுக்க உதவும் புதிய மொபைல் அப்ளிக்கேஷன்

409
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

கடந்த சில ஆண்டுகளாக மேற்கு வங்க மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில் பெண்களுக்கு நம்பிக்கை கொடுத்து, குழந்தை திருமணம்
மற்றும் பெண் கடத்தல் சம்பவங்களை தடுக்க எரிச்சரிக்கை விடுக்கும் ஒரு புதிய மொபைல் அப்ளிக்கேஷன் செயல்முறைபடுத்தப்பட்டுள்ளது. தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் முர்ஷிதாபாத்தின் மாவட்டங்களில் உள்ள பெண்கள் மத்தியில் கல்வி திட்டங்கள் நிலையில் ஒரு ஆய்வு தொடர்ந்து கடந்த ஆண்டு ‘ஜிபவர்’ என்ற அப்ளிக்கேஷனை அக்செஞ்சர் மற்றும் அரசு சாரா CINI (Child in Need Institute) நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது, கடத்தல் சம்பங்கள் அல்லது குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களை சுமார் 20 கிராமங்களிலிருந்து காக்க உதவியது என்று அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

‘2013ம் ஆண்டின் இறுதியில், நாங்கள் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் முர்ஷிதாபாத்தின் மாவட்டங்களில் உள்ள பெண்கள் மத்தியில் கல்வி திட்டங்கள் நிலையில் ஒரு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தோம். அந்த நேரத்தில், 10-19 வயதுக்கு இடைப்பட்ட இளம்வயது மற்றும் இளம் பெண்களின் பாதிப்பு பற்றி எங்களுக்கு தெரிய வந்தது’ என்று CINIயின் உதவிப் இயக்குநரான இந்திராணி பட்டாச்சார்யா கூறியுள்ளார். ‘பெண்களின் கல்வி பாதியில் நிறுத்தப்படுகிறது அல்லது அவர்கள் கடத்திச் செல்லப்படுகின்றனர். அவர்களில் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது போன்ற, கடத்தல் மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பதற்காகவும், பெண் குழந்தைகளை வழக்கமாக கண்காணிப்பதற்காகவும் ஒரு மென்பொள் தேவை என்பது எங்களுக்கு உணரப்பட்டது.’ என்றும் அவர் கூறியள்ளார்.

அதனால் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் மொபைல் அப்ளிக்கேஷன் சேவை தொடங்கப்பட்டது. இது பல மோசமான அணுகுமுறையில் இருந்து பெண் குழந்தையை காப்பாற்ற உதவியது. இந்த திட்டம் ஒரு பெரும் வெற்றியை அடைந்துள்ளது. இந்த சேவை நிதி பற்றாக்குறையின் காரணமாக 20 கிராமங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் முர்ஷிதாபாத்தின் 100 கிராமங்களில் இருந்து 7000 பெண்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம், என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அப்ளிக்கேஷன் எப்படி நிகழ் நேரத்தில் டேடா (real time data) வழங்குவதில் வேலை செய்கிறது மற்றும் கடத்தலை தடுக்கிறது என்று பட்டாச்சார்யாவிடம் கேட்டபோது, அதில் இரண்டு மூன்று நிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார். முதலாவதாக, கிராமங்களில் உள்ள சமூக அனுசரணையாளர்கள் அல்லது பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு டேப்லட்/ஆண்ட்ராய்டு போன்களில் ஜிபவர் அப்ளிக்கேஷன் நிறுவப்பட்டு வழங்கப்படும். இப்போது நாங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களது வேலை, அந்த கிராமங்களில் உள்ள 10-19 வயதுக்கு இடைப்பட்ட இளம் பெண்கள் ஒவ்வொருவரின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.

கிளவுட் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஜிபவர் நிகழ் நேர டேடா பகுப்பாய்வை அனுமதித்து, மையப்படுத்தப்பட்ட (centralised) சர்வர்களுக்கு டேடாவை விரைவாக பரிமாற்றம் செய்யப்படும். தனது பகுப்பாய்வு சார்ந்த செயல்பாடுகளை கொண்டு டேடாவை செயல்படுத்தி உடனடியாக கூர்நோக்கத்துடன் தீர்வுகளை வழங்குகிறது. இந்த கூர்நோகம் தனிப்பட்ட நிகழ்வுகளில் கண்காணிப்பது மட்டுமல்லாமல் தொடர்ச்சியான தகவல் பாய்ச்சலை உருவாக்கின்றது.