காதல் சொல்ல நேரமில்லை இனியா

685
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

து தயாரிப்பு நிறுவனமான ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் சார்பில் ராமாபுரம் ராஜேஷ், மற்றும் ஸ்ரீசினி கிரியேசன்ஸ் இணைந்து தயாரிக்கிற
படம் காதல் சொல்ல நேரமில்லை. புதுமுகம் உதயகுமாருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். குமார் பாண்டியன் இசையையும், ராஜ்குமார் ஒளிப்பதிவையும் கவனிக்கிறார்கள். ஸ்ரீநிவாசன் டைரக்ட் செய்கிறார்.

இது ஒரு பிளே பாய் கதை என்கிறார் ஸ்ரீநிவாசன். மேலும் அவர் கூறியதாவது: சில பேர் தங்களை அழகனாவும், மன்மதனாகவும் நினைத்துக் கொண்டு பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கையில் வீழ்த்திவிட வேண்டும் என்று நினைப்பார்கள். முடியாவிட்டாலும் வீழ்த்தி விட்டதாக பெருமையாக சொல்லிக் கொண்டு திரிவார்கள். இப்படிப்பட்ட பிளே பாய் குணம் படைத்த ஒருவன் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்கிறான். அவனை ஒரு பெண் எப்படி மீட்கிறாள். அதன் பிறகு அவன் பெண்ணின் பெருமையை எப்படி உணர்கிறான் என்கிற கதை.

இதனை விரசம் இல்லாமல் ஜாலியாக எடுத்திருக்கிறோம். இனியா ஹீரோயினாக நடித்திருக்கிறார். வாகைசூடவாவுக்கு பிறகு அவருக்கு இந்தப் படம் பெயர் சொல்வதாக அமையும். சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம். என்றார்.