களாக்காயின் மருத்துவ பயன்கள்!

790
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

களாக்காய் ஏராளமான தாதுக்களையும், விட்டமின்களையும் கொண்டுள்ளது.

விட்டமின் ஏ, சி , இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையை தடுக்ககூடியதாக உள்ளது.

இது, மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு நல்லது.

பற்களில், ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்தக் கூடியது. விட்டமின் சி குறைபாடுகளால் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. பசியை தூண்டுகிறது. ஈரலுக்கு பலம் தரக் கூடியது. மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கிறது.

அதே போல களாக்காயின் வேர்களை பயன்படுத்தி அதி தாகம், நாவறட்சிக்கான ஒரு எளிமையான மருந்தை தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

களாக்காய் செடியின் வேர்ப்பொடியை ஒரு ஸ்பூன் அதனுடன் சம அளவு சர்க்கரை ஆகியவற்றை எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இதை காலை, மாலை இரு வேளையும் எடுத்து வந்தால், நா வறட்சி, அதி தாகம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு; தொண்டைவலி உள்ளவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது.

kalakai_002