உதயநிதியுடன் டூயட் பாடும் எமிஜாக்சன்

277
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே பிரபலமான கதாநாயகிகள் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் உதயநிதி.
அந்த வகையில், ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகா, இது கதிர்வேலனின் காதல், நண்பேன்டாவில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த அவர், அடுத்து தான் நடிக்கும் படத்தில் ஐ பட நாயகி எமிஜாக்சனுடன் ஜோடி சேருகிறார்.

திருக்குமரன் இயக்கும் இந்த படத்திற்கு முதலில் கெத்து என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் அந்த தலைப்பு மாற்றப்பட இருப்பதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நண்பேன்டா படம் ஏப்ரல் 2-ந்தேதி வெளியாகயிருக்கும் நிலையில், தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தற்போது தொடங்கி விட்டார் உதயநிதி.

அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் இன்று முதல் தொடங்குகிறது. சில நாட்களுக்கு முன்பே யூனிட் அங்கு சென்று முகாமிட்டிருக்கும் நிலையில், நேற்று உதயநிதி, எமிஜாக்சன் உள்பட படத்தில் நடிப்பவர்கள் கேரளா சென்றுள்ளனர். மேலும், ஐ படத்தில் டூ-பீஸ் கெட்டப்பில் நடித்து இளவட்ட ரசிகர்களை நடுநடுங்க வைத்த எமிஜாக்சனுக்கு இந்த படத்தில் பாவாடை தாவணி காஸ்டியூம்தான்அதிகமாக கொடுக்கிறார்களாம். பாடல் காட்சிகளில் மட்டும்தான் கவர்ச்சிகரமாக தோன்றுகிறாராம்.