இளைய தளபதியின் புலி லேட்டஸ்ட் நியூஸ்

1058
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை ஈ.சி.ஆர். பகுதியில் உள்ள உத்தண்டியில்
நடந்து வருகிறது.

புலி படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் முதலானோர் நடித்து வருகின்றனர். வரலாற்றுப்பின்னணியில் நடைபெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு அங்கே நடைபெற்றது. அதற்காக பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கு படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் ஏறக்குறைய எடுக்கப்பட்டுவிட்டதால் தற்போது பேட்ச்வொர்க்குகளை எடுத்து வருகிறார்கள்.

அது நிறைவுற்றதும் புலி படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாட்களுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து புலியின் படப்பிடிப்பிற்காக இப்படக் குழுவினர் கேரளாவிலுள்ள மலை பிரதேசமான வாகமண் என்ற இடத்திற்கு செல்லவிருக்கின்றனர். அங்கு கிட்டத்தட்ட 20 நாட்கள் படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. வரலாற்றுப் பின்னணி கதைதான் அங்கும் படமாகவிருக்கிறது. அதாவது வரலாற்றுக்கதையில் காடு மற்றும் மலைப்பிரதேசத்தில் நடைபெறும் காட்சிகளை எடுக்க இருக்கின்றனர். இதற்காகவே அவுட்டோருக்கு பயணமாகி உள்ளனர். வாகமண் ஷெட்யூல் முடிந்த பிறகு சென்னையில் படப்பிடிப்பு தொடர உள்ளது.