இந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்!

253
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.

உடல் பருமன் (Obesity). இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும்.

அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது.

இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இந்த முறையில் தான் நீரிழிவு நோய் வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடும்போது நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

1. சீனிக்குப் பதிலாக நாட்டுவெல்லம் அல்லது பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி பயன்படுத்தலாம்.

2. அரிசி சோற்றைக் குறைத்து காய்கறி, பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

3. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

4. பாகற்காயை வாரம் மூன்று நாட்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

5. நாவல்பழம் கிடைக்கும் காலத்தில் தவறாது சாப்பிடுதல். நான்கைந்து விதைகளையும் மென்று சாப்பிட வேண்டும்.

6. முள்ளங்கி தவிர மற்ற கிழங்கு வகைகளை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.

7. வெள்ளரிப் பிஞ்சு, கோவைக்காய் உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

8. கண்டிப்பாக நாள்தோறும் வியர்க்கும் அளவிற்கு ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

9. கொழுப்பு உணவுகளைத் அறவே தவிர்க்க வேண்டும்.

10. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.

diabetes_foods