அருகம்புல்லின் அற்புத சக்தி!

1846
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

அருகம் புல்லுக்கு பல விசேட குணங்கள் இருக்கின்றது. நாக்கு வறட்சி, நாக்கு சுவை தெரியாமல் போவது, வாந்தி, எரிச்சல், பித்த மயக்கம், சோர்வு.. இது எல்லாவற்றுக்கும் அருகம்புல் சாறு நல்லது. ரத்த பித்தம் தணிந்து உடம்பைக் குளுமையாக்கும் அருகம்புல்.

அக்கி என்பது  ஒரு அவஸ்தையான சரும நோய். இதனால்  பாதிக்கப்பட்டவர்கள், அருகம்புல்லின் வேரை எடுத்து, கழுவி, சுத்தமான தண்ணீரில் வேகவைத்து, பசு நெய் கலந்து பூசிக் குளித்தால், நோயோட வீரியம் குறையும்.

அதேமாதிரி அருகம்புல்லின் வேரை அரைத்து, அந்த விழுதோடு, அரிசி கழுவிய தண்ணீரையையும் கலந்து சாப்பிட்டால், பித்த வாந்தி தணியும்.

மாதவிடாய் முன்னும் பின்னுமா இருக்கும் பெண்கள் அருகம்புல்லை அரைத்து, அந்த விழுதில் தினமும் ஒரு நெல்லிக் காய் அளவு சாப்பிட்டு வரலாம். மாதவிடாய் சரியான இடைவெளியில் ஏற்படும்.

இதுதவிர அருகம்புல் ஜூஸுக்கு, பித்தப்பையில் வரும் கல், சிறுநீரகக் கல்.. இதெல்லாத்தையும் கரைக்கக் கூடிய சக்தி இருக்கு.

அருகம்புல்லை வேரோடு அரைத்து விழுதாக்கி, அதோடு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், நலங்கு மாவு கலந்து உடம்பில் பூசி குளித்தால்.. சொறி, சிரங்கு, அரிப்பு எல்லாவற்றுக்கும் விமோசனம் கிடைக்கும்.

சில பெண்களுக்கு கழுத்தில் தாலிக்கயிறு, சங்கிலி பட்டு அந்த இடமே கருப்பா மாறியிருக்கும். சில பெண்களுக்கு உள்பாவாடையை இறுகக் கட்டி, இடுப்புல கருப்பா ஆகியிருக்கும். இதுக்கெல்லாம் கூட அருகம்புல் விழுது + மஞ்சள் + நலங்கு மாவு அற்புதமான மருந்து! இந்த மூன்றையும் கலந்து தடவி வந்தால், நல்ல ரிசல்ட் தெரியும்.

சரி.. நலங்கு மாவு எப்படி செய்றதுனு கேக்குறீங்களா? பாசிப்பயறை அரைச்சு வெச்சுக்கணும். ரோஜா மொட்டு, கஸ்தூரி மஞ்சள், விளாமிச்சை வேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), வெட்டி வேர், காய்ந்த எலுமிச்சை தோல், கதிர்ப் பச்சை (பூக்கடைகளில் கிடைக்கும்) இது எல்லாத்தையும் நல்லா வெய்யில்ல காயவெச்சு, மெஷின்ல கொடுத்து, அரைச்சுக்கணும்.

இந்த மாவோட, பயத்த மாவையும் தரமான வாசனைப் பொடியையும் கலந்தா.. அதுதான் நலங்குமாவு. சோப்புக்கு பதிலா இந்த மாவைத் தேய்ச்சுக் குளிச்சா, சருமம் பட்டுப்போல மிருதுவா இருக்கும்.

wheatgrass_juice