அனேகன் வசூல் முழு நிலவரம்

542
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

தனுஷ் நடித்து வெளிவந்துள்ள ‘அனேகன்’ படம் பத்து நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட தனுஷ் உட்பட
பலரும் தெரிவித்து வருகிறார்கள். படம் வெளியான முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூலும், இரண்டாவது நாளில் மொத்தமாக 20 கோடி ரூபாய் வசூலும் பெற்றதாக ஏற்கெனவே அறிவித்தனர். யாரெல்லாம் படத்தின் வசூலைப் பற்றி அதிகமாக குறிப்பிடுகிறார்களோ, அந்தச் செய்தியை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட ஆரம்பித்திருக்கிறார் தனுஷ். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு ஹீரோவும் இப்படிச் செய்ததில்லை. ஆனால், தனுஷ் அந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்று கூடப் பார்க்காமல் அதை வெளியிட்டு வருகிறார்.

திரையரங்க வட்டாரங்களில் விசாரித்த போது இதுவரை அனேகன் படம் தமிழ்நாட்டில் 20 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்திருக்கும் என்று சொல்கிறார்கள். இப்படம் வெளியான பல தியேட்டர்களிலும் வரும் 27ம் தேதி முதல் ‘காக்கி சட்டை’ படம் திரையிடப்பட உள்ளது. தனுஷின் முந்தைய படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படம்தான் இதுவரை வெளிவந்த தனுஷ் படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம். ‘அனேகன்’ படம் அந்தப் படத்தின் வசூலை எட்டிக் கூடப் பிடிக்க முடியவில்லை. ஆனாலும், ஒரு பரபரப்புக்காக தங்களுக்குத் தானே படத்தை விவரமாக மார்க்கெட்டிங் செய்து வருகிறார்கள் ‘அனேகன்’ குழுவினர்.

இன்னும் பத்து நாட்களில் படம் 100 கோடி வசூலைத் தொட்டது என அவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.